ஆலயத்தில் நடை பெரும் பூஜைகள்

நமது ஆலயத்தில் நடைபெற்று வரும் நித்திய பூஜையுடன், கீழ்க்கண்ட சிறப்பு பூஜைகளும் தவறாமல் நடைபெற்று வருகின்றன.

1. மூலவர் அருள்மிகு சக்தி விநாயகபெருமானுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷ அபிஷேகம் மற்றும் சங்கடகர சதுர்த்தியில் மகா அபிஷேகம்.

2. ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று காலை மகா கணபதி ஹோமம், மகா அபிஷேகம், மாலை மூலவர் சக்தி விநாயகர் உற்சவமூர்த்தி வீதி உலா.

3. மாசி மக நட்சத்திற்கு முதல் நாள், உற்சவர், அஸ்திராயர் மகா அபிஷேகம். மறுநாள் மாசிமக தீர்த்த வாரி. இரவு உற்சவர் திருவீதி உலா.

4. ஆடிப்பூரம், நவராத்திரி விழா, (தசமி வரை 10 நாட்கள்).

5. தமிழ், ஆங்கில வருட புத்தாண்டுக்கு விஷேச பூஜை.

6. சிவராத்திரி அன்று அருள்மிகு சுந்தரேஸ்வர பெருமானுக்கு நான்கு கால பூஜை.

7. கார்த்திகை மாத சிறப்பு பூஜையுடன் ஆலயம் தீபம் ஏற்றுதல்.

8. மார்கழி மாத (தனுர்) பூஜை, தைப் பொங்கல் திருநாள் பூஜை.

9. சித்திரை மாதம் பௌர்ணமி அன்று மூலவர், அபிஷேக சந்தனகாப்பு அலங்காரம். மாலை திருவிளக்கு பூஜை.

10. ஆண்டு தோறும் அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வர் திருக்கல்யாண வைபோகம்.
11. குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி ஆகிய விஷேகங்களுக்கு சிறப்பு பரிகார பூஜை.

12. ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பிரதோஷ வழிபாடு.

13. ஒவ்வொரு ஆங்கில மாத முதல் வியாழன் அன்று அருள்மிகு தட்சிணாமூர்த்தி அபிஷேகம்.

14. இரண்டாம் செவ்வாய் அன்று அருள்மிகு துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை.

15. முதல் சனிக்கிழமை அன்று நவக்கிரக அபிஷேகம். கிருத்திகை அன்று அருள்மிகு பாலசுப்ரமணியர் அபிஷேகம்.

16. சுவாதி, மூல நட்சத்திரத்தில் அருள்மிகு சாந்த ஆஞ்சநேயர் பெருமானுக்கு விஷேக பூஜை.

Friday, April 6, 2012

பங்குனி உத்திரம்

நமது ஆலயத்தில் பங்குனி உத்திர விழா சிறப்பாக 5.4.2012 அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. நகர வாசிகள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெற்றார்கள். 

ஆலய குருக்கள் சக்திவேலு அவர்கள் முருகப் பெருமானுக்கு சிறப்பான அலங்காரம் செய்திருந்தார்.

பங்குனி உத்திரத்தைப் பற்றி மேலும் சில செய்திகள்.
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.


இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.

தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

Sunday, April 1, 2012

ராம நவமி சிறப்பு பூஜை


31.3.2012 அன்று நமது ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு ராம நவமி பூஜை நடை பெற்றது. இதில் கே. கே. நகர், பாரதி நகர், என். என். நகர் மற்றும் அருகில் உள்ள இறை அன்பர்கள் கலந்து கொண்டு சாந்த ஆஞ்சநேயரின் அருள் பெற்றனர். சிறப்பு பூஜையின் பொது  இறை அன்பர் ஒருவர் சடாரி அன்பளிப்பாக அளித்தார். அவருக்கு ஆலய நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

மேலும் ஆலய பராமரிப்புக்காக இறை அன்பர்கள் மாதம் தோறும் ருபாய் 50 சந்தாவாக கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி விநாயகப் பெருமானின் அருள் பெற ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.